மதுரை அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில், திருவள்ளூர் வீரன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழகத்தில் இரண்டாவது சீசன் டி.என்.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் திருநெல்வேலியில் நேற்று நடந்த லீக் போட்டியில் மதுரை, திருவள்ளூர் அணிகள் மோதின.
மழை காரணமாக தலா 18 ஓவர்களாக போட்டி மாற்றப்பட்டது. ‘டாஸ்’ வென்ற மதுரை அணி 4 ஓவரில் 21/1 என, இருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டது. பின் 14 ஓவர்களாக போட்டி மாற்றப்பட்டது.
மதுரை அணி கேப்டன் அருண் கார்த்திக் 29வது, மணி பாரதி (67 ரன்) 27 வது பந்துகளில் அரைசதம் அடித்தனர். 14 ஓவரில் மதுரை அணி 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் குவித்தது. அருண் கார்த்திக் (68), முருகன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கைத் விரட்டிய திருவள்ளூர் அணிக்கு சதுவேத் (1), சித்தார்த் (4) ஏமாற்றம் தர, பாபா அபராஜித் 72 ரன் எடுத்தார். நிஷாந்த் 37, சஞ்சய் 11, ரங்கராஜன் 2, நாராயணன் 2 ரன் எடுத்தனர். கடைசியில் கவின் (11) ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, திருவள்ளூர் அணி, 13.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து ‘திரில்’ வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல்., தொடரின் முதல் சீசனில் மொத்தம் 7, இந்த சீசனில் 5 என, மதுரை அணி தொடர்ந்து 12வது முறையாக தோல்வியடைந்தது.