இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை 2–0 என கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் வரும் 12ல் பல்லேகெலேயில் துவங்குகிறது. இதிலிருந்து, இலங்கை ‘சுழல்’ வீரர் ஹெராத்,39, விலகி உள்ளார்.
இலங்கை அணி மானேஜர் குருசின்கா கூறுகையில்,‘‘ ஜிம்பாப்வே, இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 3 டெஸ்டில் ஹெராத் பங்கேற்றார். இதில் சுமார் 200 ஓவர் வரை (71.1+91 ஓவர்) பந்துவீசி உள்ளார். இவருடைய வயதின் காரணமாக, ஓய்வு தர முடிவு செய்துள்ளோம். இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விளையாட மாட்டார்,’’ என்றார்.
அதே நேரத்தில், முதுகப்பகுதி வலிக்கான சிகிச்சையை ஹெராத் மேற் கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது. இதன் மூலம், இத்தொடரில் காயத்தால் விலகிய நான்காவது இலங்கை வீரரானார்.