வவுனியா இராசேந்திர குளம் பகுதியில் நேற்று மாலை மின் கம்பத்துடன் சிறிய ரக லொறியொன்று மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியா செட்டிகுளம் பகுதியிலிருந்து நெளுக்குளம் பகுதியை நோக்கி பயணித்த மகேந்திரா வாகனம் ஒன்று இராசேந்திர குளம் பகுதியை அண்மித்த வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், மின் கம்பம் முறிந்து குறித்த வாகனத்தின் மீது வீழுந்ததில் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இதையடுத்து வாகனத்தில் பயணித்த வவுனியா பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த முகமட் வயது 30 என்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.