இந்திய அணியின் அணித்தலைவர் வீராட் கோஹ்லி WWE மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர் தி கிரேட் காளியை சந்தித்து பேசியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
கொழும்பு டெஸ்ட் முடிந்தபின்னர் இந்திய அணி தங்கியிருந்த ஹொட்டலில் WWE மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கும் கிரேட் காளியை வீராட் கோஹ்லி சந்தித்து பேசினார்.
இதுதொடர்பான புகைப்படங்களை கோஹ்லி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், தி கிரேட் காளி என்றழைக்கப்படும் திலிப் சிங் ராணா பஞ்சாப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.