பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட பாராளுமன்ற வாழ்வுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அமர்வு நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது கூட்டு எதிர்க் கட்சி மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், த.தே.கூ. உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி. உறுப்பினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மாத்திரமே எதிர்க் கட்சியில் அமர்ந்திருந்தனர்.
எதிர்க் கட்சியில் உள்ள இவர்கள் மாத்திரம் பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் பிரதமருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது