பொலிஸாரை தங்களது கடமையை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக பதிவு பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து செல்வதா என்பது தொடர்பில் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரையை கோரியுள்ளது.
முன்னதாக நான்கு பொலிஸ் குழுக்களை அமைத்து ஞானசார தேரரை தேடிவந்த பொலிஸாரால் அவரை கைது செய்ய முடியாமல் போனதற்கு பிறகு அவர் பொலிஸாருக்கு கடமையை செய்யவிடாமல் இடையூரு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் அவருக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கை தொடர்ந்தும் கொண்டு செல்வதாக என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று கோரியுள்ளது.