யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொதுமக்களுடன் இணைந்து வாள் வெட்டுக் கும்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடத் தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் நடந்துவரும் அசம்பாவிதங்களுக்கு வாள் வெட்டுக் கும்பலே காரணம் எனச் சொல்லப்பட்டுவரும் நிலையில் இதன் உறுப்பினர்களைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்வதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக பொதுமக்களுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன. மேலும் நன்கு ஆராய்ந்த பின்னரே இத்தகைய கும்பல்களைக் கைது செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.