டிடிவி தினகரனை கட்சியில் கட்டுப்படுத்தி வைக்க அதிரடி நடவடிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இறங்கவுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
5ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரப் போவதாக அறிவித்துள்ளார் தினகரன்.
இதனால் அவர் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற மீண்டும் களத்தில் குதிக்கப் போவதாக பரபரப்பு எழுந்துள்ளது.இதையடுத்து எடப்பாடியார் தரப்பும், கூடவே ஓ.பி.எஸ் தரப்பும் சுதாரித்துள்ளது.
இரு தரப்பும் தனித் தனியாக இன்று ஆலோசனை நடத்தியுள்ளனர் மேலும் எடப்பாடி தரப்பிலிருந்து ஓ.பிஎஸ்ஸுடன் ரகசிய ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளதுஇந்த நிலையில் இன்று எடப்பாடியார் சில அதிரடி முடிவுகளை எடுப்பார் என்று பேச்சு கிளம்பியுள்ளது.
இது தினகரனை ஓரம் கட்டி வைக்கும் வகையில் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.இதன் காரணமாக முக்கிய நிர்வாகிகளை சென்னையிலேயே தங்கி இருக்குமாறு எடப்பாடியார் அறிவுறுத்தியுள்ளாராம். மறுபக்கம் அதிமுக அம்மா கட்சி எம்.எல்.ஏக்களை மத்திய உளவுப்படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனராம்.
என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்பு இருந்தாலும் கூட வழக்கம் போல ஜெயக்குமாரை விட்டு நாங்க தினகரனை ஒதுக்கி வச்சது வச்சதுதான். யாரும் அன்னம் தண்ணி புழங்கக் கூடாது. இதுதான் இறுதித் தீர்ப்பு என்று சொல்வார்களா அல்லது தினகரனை கட்சியை விட்டு நீக்கி அதிரடி காட்டுவார்களா என்பது எதிர்பார்ப்புக்குரியது.