நேற்று திங்கட்கிழமையைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமையும் பிரான்சின் பல பகுதிகளில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய, வடகிழக்கு மாவட்டங்களில் கடும் மழை பொழியும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. முன்னதாக 11 மாவட்டங்களில் மழை பொழியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒன்று ஓகஸ்ட் 1 ஆம் திகதி மேலதிகமாக 12 மாவட்டங்களில் மழை பொழியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Ain,
Doubs,
Jura,
Loire,
Haute-Loire,
Bas-Rhin,
Haut-Rhin,
Rhône,
Haute-Saône,
Saône-et-Loire
Vosges,
Territoire-de-Belfort,
Allier,
Aube,
Côte-d’Or,
Marne,
Haute-Marne,
Meurthe-et-Moselle,
Meuse,
Moselle,
Nièvre,
Puy-de-Dôme,
Yonne
ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, 100 கிலோமீட்டர்கள் வேகத்தில் காற்று வீசும் எனவும், கடும் இடி மின்னலும் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர நேற்று, நேற்று முன்தினம் பெய்த மழையினால் 17,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருக்கின்றன. இந்த நிலமை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.