காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் நேற்று 162 ஆவது நாளாக தொடரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியொன்று இடம்பெற்றது.
மெதடிஸ் திருச்சபையின் வடக்கு கிழக்கு மாவட்ட அவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்புப் பேரணி உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் ஒருமணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பானது.
இதற்கமைய இந்தப் பேரணி ஏ 9 வீதி ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினையும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் தெடிஸ்த திருச் சபையின் பேராயர் தலமையிலான அருட் தந்தையர்கள் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து கையளித்தனர்.
நேற்றைய பேரணியின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அருட் தந்தையர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் கொண்டனர்