ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய தினம் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாற்காவடியுடன் வருகைதந்தமை அங்கிருந்த பக்தர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
வெளிநாட்டுப் பெண் ஒருவர் இந்துமதத்தின் பெருமைகளை அறிந்து பாற்காவடி எடுத்துள்ள நிகழ்வு நல்லூர் கந்தனின் மகத்துவத்தினை உலகறியச் செய்துள்ளது.
இச் செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்தவாரம் யாழில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் யாழ் பெண்ணை திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.