நெவில் பிரணாந்து வைத்தியசாலை இன்று (01) முதல் சுகாதார அமைச்சின் கீழ் அரச போதனா வைத்தியசாலையாக சத்திரசிகிச்சை சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைத்தியசாலைக்கு நிருவாக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த அமைச்சரவையில் அனுமதியைப் பெற்றிருந்தார்.
இந்த வைத்தியசாலையில் நாளை முதல் மக்கள் இலவசமாக சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளார்.