ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை குறித்து விமர்சிப்பவர்கள் இந்நாட்டின் கடன் சுமையை கண்டுகொள்ளாதிருப்பது கவலைக்குரிய ஒன்றாகும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரச கொள்கைகளை உருவாக்க தொழிற்சங்கங்களுக்கு முடியாது. அது பொது மக்களுக்கு மட்டுமே முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.