சென்னை வில்லிவாக்கம் பாலாம்பிகை நகரைச் சேர்ந்தவர் 76 வயது மணி. ரயில்வேயில் மெயில் டிரைவராக இருந்து ஓய்வு பெற்ற இவர் சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அவருடன் அவரது 73 வயது மனைவி ஹேமாவதியும் சேர்ந்து சென்றுள்ளார். மதுரையில் சாமி கும்பிட்டுவிட்டு இருவரும் நேற்று பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி. பெட்டியில் சென்னைக்குத் திரும்பினர். இரவு 11 மணியளவில் ரயில் மணப்பாறை அருகே வந்த போது ஹேமாவதிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
ஆனால் ரயிலில் டாக்டர்கள் இல்லாததால் அவருக்கு உடனே சிகிச்சை அளிக்க முடியவில்லை. உயிருக்கு போராடியபடியே தவித்த மனைவியை காப்பாற்ற முடியாமல் மணி தவித்தார். உயிருக்கு போராட்டம் ஏ.சி. பெட்டி என்பதால் மூச்சு விட ஹேமாவதிக்கு கூடுதல் சிரமமாக இருந்துள்ளது. இதனையடுத்து திருச்சி ஜங்சனில் தான் டாக்டரை வரவழைத்து சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் ஹேமாவதி உயிருக்கு போராடுவதை தவிப்புடன் மணியும் மற்ற பயணிகளும் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
உயிரிழப்பு சுமார் 45 நிமிட பயணத்துக்கு பிறகு ரயில் திருச்சி ஜங்சன் வந்தது. அதற்குள் திருச்சி ரயில் நிலைய பிளாட்பாரத்தை ரயில் தொட 10 நிமிடத்திற்கு முன்பதாக உயிருக்கு போராடிய ஹேமாவதி பரிதாபமாக இறந்தார். தன் கண் எதிரில் தனது மடியிலேயே ஹேமாவதி உயிர் போவதை பார்த்து மணி கதறி அழுதார்.
திருச்சி ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும், டாக்டர் ஹேமாவதியை பரிசோதித்து பார்த்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தகவலை உறுதி செய்தார். சென்னைக்கு அனுப்பிவைப்பு உடனே ரயில் பெட்டியில் இருந்து ஹேமாவதி உடல் இறக்கப்பட்டது.
ரயில்வே சப்- இன்ஸ்பெக்டர் லெட்சுமி மற்றும் போலீசார் ஹேமாவதி உடலை சென்னைக்கு கொண்டு செல்ல மணிக்கு உதவினர். ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு சென்னைக்கு ஹேமாவதி உடல் இரவோடு இரவாக அனுப்பி வைக்கப்பட்டது. ஓடும் ரெயிலில் இறந்த ஹேமாவதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மாற்று நடவடிக்கை ரயில்களில் டாக்டர் இல்லாததால் இதுபோன்ற உயிர் பலிகள் அதிகம் ஏற்படுகிறது.
முன்பு ரயில்களில் பயணம் செய்யும் டாக்டர் குறித்த விபரம் டிக்கெட் முன்பதிவின்போதே பெறப்பட்டு அவசர நேரத்தில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உதவிக்கு பயன்படுத்தப்படுவார்கள். இப்போது டாக்டர்கள் அனைவரும் சொந்த கார், அல்லது விமானத்திலேயே பயணம் செய்கிறார்கள். இதனால் ரயில் பயணிகள் மருத்துவ உதவிக்கு மாற்று நடவடிக்கை அவசியம் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.