இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு தற்போது நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் கோலி சதமடித்தார். இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்யப்பட்டது. இதையடுத்து இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இன்னிங்ஸில் கோலி மூன்று சாதனைகளைப் படைத்துள்ளார்.
அதன்படி, வெளிநாட்டுத் தொடர்களில் வேகமாக 1,000 ரன்கள் கடந்த இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவர்
17 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி அடிக்கும்17 வது சதம் இது. மேலும், கேப்டனாக அவர் அடிக்கும் 10 வது சதமாகும். அதிவேகமாக 10 சதங்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் கோலி 5 வது இடம் பிடித்துள்ளார். மேலும், இந்த சதம் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரது சராசரி 50+ ஆகியுள்ளது.
டெஸ்ட், ஒரு நாள், டி 20 என்று அனைத்து விதமான கிரிக்கெட்களிலும் 50+ சராசரியை வைத்துள்ள ஒரே வீரர் கோலிதான். வாழ்த்துகள் கேப்டன் ஜி.