னாமா நாட்டில் ‘மோசக் பொன்சிகா’ என்ற சட்ட நிறுவனம் உள்ளது. உலகம் முழுவதும் பணம் பெற்றுக்கொண்டு போலி நிறுவனங்களை தொடங்கி கொடுப்பது இதன் வேலை.
மோசக் பொன்சிகா நிறுவனத்திற்கு 12 நாடுகளில் கிளைகள் உள்ளன. இதன் மூலம் 40 ஆண்டுகளாக 2.14 லட்சம் போலி நிறுவனங்களை தொடங்கி, விற்று வந்துள்ளது. ரூ.66,290ல் ஒரு போலி நிறுவனத்தை தொடங்கி கொடுத்துவிடும். இயக்குநர் நியமனம், பணம் பதுக்கல் உள்ளிட்ட விஷயங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இப்படி சட்டவிரோதமாக, வரிஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் பற்றிய 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் பதிவு செய்தது. இந்த தகவலை முதன்முறையாக ஜெர்மன் பத்திரிகை எஸ்.இசட் வெளியிட்டதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தகவல்கள் பின்னர் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள்(ஐசிஐஜே) வசம் ஒப்படைக்கப்பட்டது. உலகம் முழுவதும் மொத்தம் 100 பத்திரிகைகளிடம் இதுதொடர்பான ஆவணங்கள் உள்ளன. இந்தியாவை சேர்ந்த 500 பேரின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
மத்திய அமெரிக்க நாடுகளில் இவர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய், ரியஸ் எஸ்டேட் அதிபர் கே.பி சிங், அரசியல் பிரமுகர் அனுராப் கெஜ்ரிவால், அதானி நிறுவன தலைவர் கவுதம்அதானி, சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் சமீர் ஜெலாட் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ரஷ்ய அதிபர் புதின் ரூ.12 ஆயிரம் கோடி சொத்து குவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தவிர ஐஸ்லாந்து பிரதமர் சிக்மண்டூர் டேவிட், பிபா நெறிமுறை குழு உறுப்பினர் யுவான் டெமியானி, பிபா துணைத்தலைவர் யூஜினியோ பிகியுரோடோ, பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பெயர்களும் இடம் பிடித்துள்ளன.