பிரான்சின் புதிய பிரச்சனையாக தலைதூக்கியுள்ள காட்டுத்தீ, நேற்று வியாழக்கிழமை மாலை வரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவன் கைதுசெய்யப்படுள்ளான்.
கடந்த திக்கட்கிழமை இரவு, தென்கிழக்கு பகுதியில் பரவ ஆரம்பித்த தீ, நான்கு நாட்களின் பின்னரும் நேற்று வியாழக்கிழமை வரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என சிவில் பாதுகாப்பு அதிகாரி Lieutenant-Colonel Michael Bernier தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் முன்னதாக வழங்கியிருந்தோம். மேலும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, தீ பரவியதுடன் தொடர்புடையதாக இரு இளைஞர்கள் Marseille நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுவரை 12,000 பேர்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டும், 1500 பேர் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அவசர முகாம்களில் தங்கவைக்கப்பட்டும் உள்ளனர். 6,000 தீயணைப்பு படை வீரர்கள் களத்தில் போராடி வருவதாக பிரதமர் எத்துவா பிலிப் தெரிவித்துள்ளார்.
சிகரெட் துண்டின் மீதியில் இருந்து தீ பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டாலும், மார்செய்யில் சிறு கலவரம் (குழு மோதல்) ஒன்றும் இடம்பெற்றுள்ளது எனவும், அதன் முடிவில் தீ பரவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு காரணங்களும் உறுதி செய்யப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரானைகளை ஆரம்பித்துள்ளனர். 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் எனவும், அவர்களில் ஒருவன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.