அமெரிக்காவின் Mylan மருந்துது; தயாரிப்பு நிறுவனம், காப்புரிமையற்ற (générique) எய்ட்சிற்கெதிரானதும், முன்னெச்சரிக்கையுமான ஒரு மருந்தினைப் பிரான்சில் சந்தைப்படுத்தி உள்ளது.
Emtricitabine/Tenofovir disoproxil Mylan எனும் இந்த மருந்து, எய்ட்சினால் (HIV-1) பாதிக்கப்படவர்களிற்கும், இலகுவாகப் பாதிப்படையக் கூடிய நிலையில் பலவீனமாக உள்ளவர்களிற்கும் வழங்கப்டுகின்றது.
இது வைத்தியசாலையினால் வழங்கப்படும் மருந்துச் சீட்டிற்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால் இன்னும் சில அமைப்புக்கள் இந்த மருந்துகள் வீரியமற்வை என விமர்சித்த வண்ணம்தான் உள்ளனர்.
இந்த மருந்து 2012 ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்காவிலும், 2015 இலிருந்து பிரான்சிலும் உபயோகப்படுத்தபடுகின்றது. 100% மருத்துவக் காப்புறுதியனால் பொறுப்பேற்கப்பட்டு வழங்கப்பட்ட இந்த மருந்தின், 30 குளிகைகள் அடங்கிய போத்தல், 400€ விற்கு விற்கப்பட்மையால், மருத்துவக் காப்புறுதிக்குப் பெரும் செலவீனத்தை ஏற்படுத்தியது. தற்போது காப்புரிமையற்ற மருந்து விற்பனையாக இருப்பதால், முன்னைய செலவீனம்ஈ மூன்றில் ஒன்றாகக் குறைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.