ஒரு மாதத்தில் உமானுவல் மக்ரோனிற்கான மக்கள் நம்பிக்கை மூன்று புள்ளிகளால் குறைந்துள்ளது. ஆனால் பிரதமர் எதுவார் பிலிப்பின் மீதான நம்பிக்கை இரண்டு புள்ளிகளினால் அதிகரித்துள்ளது. Ipsos நடாத்திய புள்ளிவிபரத்தின் விபரத்தின் இன்றைய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்ரோனின் மீதான நம்பிக்கையை விட, நம்பிக்கையீனமே அதிக வாக்குகளே உள்ளன. ஆதரவாக 41% வாக்குகளும், 42% நம்பிக்கையற்ற வாக்ககளையும் பெற்றுள்ளார். மிகுதி 17 சதவீதமானவர்கள் கருத்துத் தெரிவிக்க விரும்பியிருக்கவில்லை.
ஜனாதிபதியின் நடவடிக்கைகளிற்கு எதிரான வாக்குகளின் புள்ளி 15 இனைத் தாண்டி உள்ளது.
இதே கட்டத்தில், 2007 ஆம் ஆண்டு இதே மாதம் நடாத்தப்பட் கணக்கெடுப்பில், நிக்கோலா சார்க்கோசி 66% நம்பிக்கை வாக்குகளையும், அதன் பின்னர் 2012 இல் பிரோன்சுவா ஒல்லோந்த் 55% நம்பிக்கை வாக்குகளையும பெற்றிருந்தமை குறி;ப்பிடத்தக்கது.
இவர்களுடன் ஒப்பிடுகையில் எமானுவல் மக்ரோன் மீதான நம்பிக்கை வாக்குகள் மிகவும் குறைவாகவே உள்ளன.