அகதிகள் தாங்கள் சென்றடையும் முதல் நாட்டிலேயே அடைக்கலம் கோரமுடியும் என்ற சட்டம் எந்த சூழ்நிலையிலும் பொருந்தக்கூடியது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
ஆஸ்திரியா மற்றும் ஸ்லோவேனியா தொடுத்திருந்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2015-16 இல் அகதிகளாக ஆஸ்திரியாயாவிற்குள் சென்ற நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
குரோஷியாவிலிருந்து வெளியேறி ஆஸ்திரியாவில் தஞ்சம் புக முயன்ற இரு சகோதரிகள் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த இரு அகதி சகோதரிகளான கடிஜாவும் ஜய்னாப் சவாரியும் தங்கள் பிள்ளைகளுடன் 2016 இல் ஆஸ்திரிய எல்லைக்கு சென்றிருந்தனர்.
அவர்களை அதிகாரிகள் ஆஸ்திரியா எல்லைக்குள் அனுமதித்தபோதிலும் அடைக்கலம் வழங்கவில்லை. மாறாக டப்பிளின் விதிமுறைகளின் படி ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கு அவர்கள் முதலில் காலடி எடுத்து வைத்த குரோசியாவிற்கு அவர்களை திருப்பி அனுப்ப அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இதனை தொடர்ந்து ஆப்கான் சகோதாரிகள் விவகாரம் நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு சென்றது.
இந்த வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் புதன்கிழமை டப்பின் நடைமுறையின் படி இரு சகோதரிகளும் குரோசிய எல்லையை கடந்தது தவறு என தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அகதிகள் தாங்கள் முதலில் காலடி எடுத்துவைக்கின்ற நாட்டிலேயே அடைக்கலம் கோர முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டப்பிளின் நடைமுறை எந்த சூழ்நிலையிலும் பொருந்தக்கூடியது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் 100ற்கும் மேற்பட்ட அகதிகள் பாதிக்கப்படுவர் குரோடியாவில் தற்போது தங்கியுள்ள அகதிகளிற்கும் ஆஸ்திரியா அடைக்கலம் வழங்க தேவையில்லை என ஆஸ்திரிய சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார்.