தென் ஆப்ரிக்கா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்குப் பின் இந்த டெஸ்ட் போட்டியில் ரபாடா ஆடுவதால் தென் ஆப்ரிக்க அணி அதிக உற்சாகத்துடன் உள்ளது.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த இரு அணிகளிடையே இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது, 6 விக்கெட்களைக் கைப்பற்றிய ரபாடா, பென் ஸ்டோக்ஸை கடுமையான வார்த்தைகளில் திட்டியதால், கடந்த டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் ரபாடா இல்லாமலேயே தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து அணியை 2-வது டெஸ்ட்டில் வென்றது. இந்நிலையில் இன்று தொடங்கவுள்ள 3-வது டெஸ்ட் போட்டியில் தடைக்குப் பிறகு ரபாடா மீண்டும் களம் இறங்கவுள்ளார். 18 டெஸ்ட் போட்டிகளில் 77 விக்கெட்களை சாய்த்துள்ள ரபாடா, இப்போட்டியில் ஆடுவது தென் ஆப்ரிக்க அணிக்கு கூடுதல் பலத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. கடந்த டெஸ்ட் போட்டியைப் போல் இந்த டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அணியைக் குறைந்த ரன்களில் சுருட்ட முடியும் என்ற நம்பிக்கையில் அந்த அணியினர் உள்ளனர்.
பந்துவீச்சில் ரபாடாவைப் போல் பேட்டிங்கில் ஹசிம் ஆம்லா இங்கிலாந்துக்கு சவாலாக இருக்கிறார். கடந்த டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்த ஆம்லா, இந்த டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்தை ஒரு கை பார்க்கத் தயாராக உள்ளார். போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த டெஸ்ட்டில் ஆம்லா கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 311 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த டெஸ்ட் போட்டியில் 13 மணி நேரத்துக்கும் மேல் ஆம்லா அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். அவருடன் டுபிளெசிஸ், டி காக் ஆகியோர் இருப்பது தென் ஆப்ரிக்காவின் பேட்டிங்கை பலப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை இன்றைய போட்டியில் டாம் வெஸ்லி, அறிமுக ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் கவுண்டி போட்டிகளில் வெஸ்லி நிறைய ரன்களைக் குவித்துள்ளார். அவரது வருகை, ஜோ ரூட், அலஸ்டார் குக் ஆகியோரைக் கொண்டுள்ள இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் தோற்ற பிறகு இங்கிலாந்து அணியை, பலரும் விமர்சித்துள்ளனர். தங்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அந்த விமர்சனங்களுக்கு இங்கிலாந்து வீரர்கள் பதிலளிப்பார்களா என்பதைத் பொறுத்திருந்து பார்ப்போம்.