யாழ்ப்பாண வர்த்தகர் தி.துவார கேஸ்வரனுக்கு எதிராகப் பகிரங்கப் பிடியாணை உத்தரவு பிறப்பித்தது கொழும்பு, புதுக்கடை நீதிவான் மன்று.
தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகத்தர்களை கடமை செய்யவிடாது அடாவடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்த வழக்கிலேயே நீதிமன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, துவாரகேஸ்வரனின் போக்குவரத்துச் சேவையில் பணியாற்றும் பேருந்து சாரதியை விளக்கமறியலில் வைக்க நீதிவான் மன்று கட்டளையிட்டது.
“தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்துவதில் முரண்பட்ட வர்த்தகர் துவாரகேஸ்வரன், அங்கு பணியாற்றும் அலுவலர்களுடன் அடாவடித் தனம் புரிந்துள்ளார். அது தொடர்பில் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்கடை நீதிவான் மன்றில் துவாரகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டது.
அத்துடன், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவுறுத்தலை மீறி பேருந்தை நிறுத்தி வைத்த குற்றச்சாட் டில் துவாரகேஸ்வரனின் போக்குவரத்துச் சேவையில் பணியாற்றும் சாரதி கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன் றின் உத்தரவில் விளக்கமறிய லில் வைக்கப்பட்டார்.
வர்த்தகரைக் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு அவருக்கு எதிராக புதுக்கடை நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.