தமிழ் தேசிய வீரர்கள் தின நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் திருகோணமலையில் நினைவுகூரப்பட்டது.
திருகோணமலை கடற்கரையில் 1996ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வெலிகடை தியாகிகள் திறந்த வெளி அரங்கில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் திருகோணமலை அமைப்பாளர் சின்னவன் சிவகுமார், ரெலோ நிர்வாக செயலாளர் நித்தியாந்தன் நித்தி மாஸ்ரர், முந்நாள் நகர சபை உறுப்பினர் சி.நந்தகுமார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.