பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழுக்க பிரபலமாகிவிட்ட நடிகராக மாறியிருக்கிறார் பிரபாஸ். பாகுபலி-2 படத்தை தொடர்ந்து பிரபாஸ், சாஹோ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் பிரபாஸ்க்கு வில்லனாக கத்தி புகழ் வில்லன் நீல் நிதின் முகேஷ் நடிக்க உள்ள நிலையில், இப்போது மற்றுமொரு பாலிவுட் நடிகரான சங்கி பாண்டேவும் இணைந்துள்ளார். சாஹோ படத்தில் சங்கி பாண்டேவுக்கு மிகவும் முக்கியமான ரோல் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அவர் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொன்னாராம்.
சுஜித் இயக்கும் சாஹோ படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளது. படத்திற்கு இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லை.