பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், முதல்வர் வீடு அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூர். இங்கு முதலமைச்சராக இருப்பவர் ஷபாஸ் ஷெரீப். இவர் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர்.
இவரது வீட்டின் அருகே, காவலுக்கு இருந்த முதல்வர் ஷபாஸ் ஷெரீப் வீட்டின் அருகே நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. இது மனித வெடிகுண்டு தாக்குதல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த சில வருடங்களில் லாகூரில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.