நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கிறார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார். பின்னர், ராணுவ அணிவகுப்புடன் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறார்.
அங்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள், அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் அவரை வரவேற்கின்றனர்.
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மதியம் 12.15 மணிக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர், ராம்நாத் கோவிந்த்-க்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
விழா முடிந்ததும், ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தாருடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்கிறார்.