நல்லூர் ஆலய தெற்கு கோபுர வாசல் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஜெயன்தன் (வயது 39) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான இவர் புனர்வாழ்வு பெறவில்லை என்றும் குறித்த நபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.