ஆப்கன் தலைநகர் காபூலில் நடந்த தீவிரவாத தற்கொலை படை தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். காபூல் நகரின் மேற்கு பகுதியில்காரில் வந்த தீவிரவாதி உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடித்து இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை தீவிரவாதி வந்த கார் பயங்கரமாக வெடித்ததில் அருகில் உள்ள கட்டிடங்கள் உடைந்து சிதறின. கண்ணாடி ஜன்னல்கள் காற்றில் பறந்தன.
வாகனங்கள் அடையாளம் தெரியாமல் சிதைந்தன. காதை பிளக்கும் வெடிகுண்டு சத்தம் கேட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இந்த தற்கொலை தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கொடூர நிகழ்வுக்கு தீவிரவாத அமைப்புகள் இதுவரை எதுவும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால் தாலிபன்களின் கைவரிசையாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் ஆப்கனி்ல் நடந்த தாக்குதலில் 1662 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. புள்ளி விவரம் தெரிவிக்கிறது.