மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிசூடு நடத்திய போது, தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த பகுதியில் மணல் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி பிரயோகத்தையடுத்து, அங்கிருந்தவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.
17 வயதான மதுசன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்த சிறுவனின் சகோதரரான 18 வயதான நிசாந்தன் என்பர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.