மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த யாராவது சந்திக்க நேர்ந்தால் அவருடன் கதைப்பது தவிர்க்க முடியாத ஒன்று எனவும், அவ்வாறு கதைப்பதானது கட்சி மாறுவதற்கான பேச்சுவார்த்தை என்று யாராவது கூறுவார்கள் என்றிருந்தால் அது நகைப்புக்கிடமான ஒன்று என ஸ்ரீ ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீ ல.சு.கட்சி உறுப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இரகசியப் பேச்சுவார்த்தைகள் ஏதும் இடம்பெற்றதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதா? இருப்பதா? என்று தீர்மானம் எடுப்பதாயின் அது டிசம்பர் மாதத்திலேயே நிகழும். ஏனெனில், இதற்கான உடன்படிக்கை டிசம்பர் 31 வரை உள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.