சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விக்னேஷ் சிவன். போஸ்டர் மாஸ் என்று அவரின் ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. செகண்ட் லுக் போஸ்டரை சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.