ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எவரும் கட்சி தாவ மாட்டார்கள் என குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க நேற்று(20) சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தார்.
சாதாரணமாக குடும்ப வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அவற்றை வீட்டிற்குள்ளேயே தீர்க்க வேண்டும் என்றும் கூறிய அமைச்சர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும் உள்ளக ரீதியான பிரச்சினைகள் இருப்பதாகவும் அவற்றை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தனியாக கட்சியொன்றினால் செய்ய முடியாமல் போனதை பிரதான இரண்டு கட்சிகள் இணைந்து நாட்டிற்கு செய்திருப்பதாகவும், அது கட்சியின் தீர்மானம் என்றும் எவரும் கட்சியை விட்டு வௌியேறுவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.