அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பலம் இன்னும் இரு வாரங்களில் இழக்கப்படும் என கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்துக்குள் இருக்கும் நெருக்கடி நிலைமையை மறைக்க வெவ்வேறு விதமான பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் நிதி தொடர்பான தீர்மானங்கள் அர்ஜுன் மஹேந்திரனினால் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த அரசாங்கத்தின் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானம் நெவில் பிரணாந்டோவினால் எடுக்கப்படுகின்றது.
இந்நாட்டின் நீதி நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்பது ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழு செயலாளர் ஹுசேன் இளவரசர். இந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தை முன்னெடுப்பது புலம்பெயர் புலி ஆதரவாளர்கள்.
இந்த அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் வெளியேறுவதற்கு இன்னும் காலம் எடுக்க வேண்டாம் எனவும் டளஸ் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் டிசம்பர் வரை இருக்க வேண்டியதில்லை. செப்டம்பர் 2 உடன் வெளியே வரவும். இது ஐ.தே.க.யின் அரசாங்கம். இந்த அரசாங்கத்துக்குள் ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் தொடர்ந்தும் இருந்தால், யானை விழுங்கிய விளாம் பழம் போன்றுதான் இருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்