மேல் மாகாணத்தில் சேவையிலுள்ள தனியார் பஸ்களுக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் சேவையிலுள்ள தனியார் பஸ்களில் பயணிப்பவர்களுக்கு கட்டணம் பெற்றுக் கொண்டதற்கான டிக்கெட் வழங்காதிருத்தல் மற்றும் மீதமுள்ள பணத்தை செலுத்தாதிருத்தல் போன்றன குறித்து முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலோ அல்லது கண்டறியப்பட்டால் அத்தகைய பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகார சபையின் தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தவறுகளை மேற்கொள்பவர்களின் போக்குவரத்து அனுமதிப் பத்திரம் தடை செய்யப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு செயற்படாத பஸ்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறும் போக்குவரத்து அதிகார சபை பொது மக்களைக் கேட்டுள்ளது. 011 5 559 595 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறும் அதிகார சபை பொது மக்களைக் கேட்டுள்ளது.