வித்தியா கொலை வழக்கில் சிறிகஜன் திட்டமிட்ட விதத்தில் மாட்ட வைக்கப்படுவதாக தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்களிலில் இரு்நது தகவல்கள் கசிந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழப் பொலிசார் பல வழிகளிலும் பழி வாங்கப்படுவதாகவும் சிங்கள பொலிசாரால் அவர்கள் திட்டமிடப்பட்டு பல வழக்குகளில் மாட்டி வைக்கப்படுவதாகவும் சிங்களப் பொலிசார் அனுபவிக்கும் பல சலுகைகள் தமிழ்ப் பொலிசாருக்கு கிடைப்பதில்லை எனவும் தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயரதிகாரிகளின் உத்தரவு்ககு ஏற்பவே சிறிகஜன் செயற்பட்டார் என தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த வழக்கில் உயரதிகாரிகளின் உத்தரவு்ககு அமையவே சிறிகஜன் புங்குடுதீவு சென்று சுவிஸ்குமாரை அங்கிருந்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தார் எனவும் சிறிகஜனின் தொலைபேசி இலக்கத்தை சுவிஸ் குமாருக்கு கொடுத்தவர் யார்? என சுவிஸ்குமாரை விசாரித்து பார்த்தால் உண்மை அறியலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பல முக்கிய குற்றவாளிகளை பிடித்தும் கஞ்சா உட்பட்ட போதைப் பொருட்களை கடத்துபவர்களை பிடித்தும் சிறிகஜன் மிகத் திறமையான முறையில் செயற்பட்டுள்ளார் எனவும் தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.