நாட்டில் மணிக்கு சுமார் 50Km வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேற்கு மத்திய மலைப்பகுதிகள் , வடக்கு, வடமத்திய ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலமான காற்று வீசக்கூடும்.
மேற்கு ,மத்திய ,சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று(19) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரையோரங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலமான காற்று வீசக்கூடும். மின்னலிலிருந்து ஏற்படும் அனர்த்தங்களை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.