விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சிலுக்குவார்பட்டி சிங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘கதாநாயகன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, புதுமுக இயக்குநர் செல்லப்பா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக, நடித்து தயாரித்து வந்தார் விஷ்ணு விஷால்.
‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, விஷ்ணு விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளது படக்குழு.
முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்தில் ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளைச் சுற்றி நடைபெற்றுள்ளது.
விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது படக்குழு. ‘கதாநாயகன்’ படத்தின் வெளியீட்டுப் பணிகளை முடித்துவிட்டு, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.