கனடாவில் காட்டுத் தீ மூண்டதைத் தொடர்ந்து நாட்டின் மேற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
காட்டுத் தீ வேகமாகப் பரவிவருவதால் அதிகாரிகள் புதிய அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.
வீடுகளை விட்டு வெளியேற சுமார் 24,000 பேருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் 60 விழுக்காட்டினர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி, 162 காட்டுத் தீச்சம்பவங்கள் பதிவானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 3,000 தீயணைப்பாளர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.