காமெடி நடிகர்கள் கஞ்சா கருப்பு, யோகி பாபு, பவர் ஸ்டார் சீனிவாசன் மூவரும் ஒரே படத்தில் ஹீரோக்களாக நடிக்கிறார்கள் படத்தின் பெயர் நான் யார் தெரியுமா?. ரோஷன், அர்ஷிதா, சத்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். ரஷாந்த் இசை அமைக்கிறார், சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் நவீன்ராஜ் கூறியதாவது:
“காவல் துறை அதிகாரிகளாக வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வரும் மூவர் வாழ்விலும் ஒரு பெண் பேய் குறுக்கிடுகிறது அந்த பேய் இவர்களை போலீஸ் அதிகாரிகளாக்க மூன்று நிபந்தனைகளை போடுகிறது. நிபந்தனைகளை சவாலாக ஏற்றுக்கொண்டு போராடும் அவர்களின் அவஸ்தைகளை நகைச்சுவையுடன் சொல்லும் படம். கஞ்சா கருப்பு, பவர் ஸ்டார், யோகி பாபு ஆகிய மூவரும்தான் ஹீரோக்கள், மூவருக்குமே சம வாய்ப்பு படத்தில் இருக்கிறது. 100 சதவிகித காமெடி படம்” என்கிறார் நவீன்ராஜ்.