சர்வதேச பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த இன்று (15) அதிகாலை வெள்ளிப் பதக்கமொன்றை பெற்று சாதனை படைத்துள்ளார்.
ரி. 46 ஆம் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டே அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
57.93 மீற்றர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தே இவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இந்தப் போட்டியின் தங்கப்பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் இடத்துக்கான வெண்கலப் பதக்கம் சீனாவுக்கு கிடைத்துள்ளது.
இம்முறை உலக பரா ஒலிம்பிக் போட்டி நிகழ்வுகள் லண்டனில் நடைபெற்று வருகின்றது. 92 நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இப்போட்டியில் இலங்கைக்கு 12 ஆவது இடம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.