முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. தசாநாயக்கவுக்கான தீர்ப்பை கோட்டை நீதவானே வழங்க வேண்டும் என வத்தளை நீதவான் பூர்ணிமா பரணகம அறிவித்துள்ளார்.
இதற்கமைய சந்தேகநபரான முன்னாள் கடற்படை பேச்சாளர் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த புதன்கிழமை சந்தேகநபரை கைதுசெய்து வெலிசர கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு சென்று சந்தேகநபரை பார்வையிட்ட பின்னர் சரியான உத்தரவை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன, வத்தளை நீதவானுக்கு அறிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போதே, குறித்த வழக்கு தொடர்பில் கோட்டை நீதவானே சரியான தீர்ப்பொன்றை வழங்க வேண்டும் என வத்தளை நீதவான் கோட்டை நீதவானுக்கு அறிவித்துள்ளார்.
11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. தசாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.