ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பங்களாதேஷுக்கு, இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா அம்மையாரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யதுள்ளார்.
ஜனாதிபதி, இந்த விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர், சுகாதார அமைச்சர் சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் 1972ஆம் ஆண்டில் ஆரம்பமாகின