அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஸ்டீர்ன்ஸ் பார்க் கடற்கரையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மணல் தேவதைகள் வடிவமைக்கும் கின்னஸ் முயற்சி நடந்தது.
இதில் பங்கேற்றவர்கள் கை, கால்களை நீட்டி படுத்தபடி, மணலில் முடிந்த அளவு புதைந்து தேவதை வடிவத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதன்படி, மொத்தம் 1,414 பேர் பங்கேற்றனர். இதில், 27 பேரின் மணல் தேவதைகள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. முடிவில், 1,387 மணல் தேவதைகள் ஒரேசமயத்தில் வரையப்பட்டதாக புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
இதற்கு முன் இங்கிலாந்தில் கடந்த 2015ம் ஆண்டு பீம்பிரோகிஷயரில் 352 பேர் சேர்ந்து மணல் தேவதையை வடிவமைத்ததே சாதனையாக இருந்தது. அது அமெரிக்காவில் முறியடிக்கப்பட்டுள்ளது.