ஒரு வருடத்திற்கு முன்னர் துப்பாக்கிதாரி ஒருவன் ஒலான்டோ இரவு விடுதியில் நடாத்திய துப்பாக்கி தாக்குதலில் 49-பேர்கள் கொல்லப்பட்டனர்.ரொறொன்ரோ கலைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டவர்களிற்கு நெருக்கமானவர்.இதன் காரணமாக தனது கலைத்திறனை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்தினார். சேர்ச்-வெல்லஸ்லி வில்லேஜில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
ஜெனட் றொமெரோ-லிவா மரத்தால் செய்யப்பட்ட இச்சுவர் சித்திரத்தை “Still Estamos Aqui”-“நாங்கள் இன்னமும் இங்கே இருக்கின்றோம்” என்ற ஸ்பானிய வாசகத்தை அவரது படைப்பில் தெரிவிக்கின்றார்.
படுகொலையில் கொல்லப்பட்ட வர்களில் பெரும்பாலானவர்கள் ஹிஸ்பானிக் வம்சத்தவர்கள்.டொமினிக்கர்கள், மெக்சிக்கர்கள் மற்றும் கொலம்பிய நாட்டவர்களும் இதற்குள் அடங்குவர். 2-3ற்கும் மேற்பட்டவர்கள் போர்ட்டோ ரிக்கனை சேர்ந்தவர்கள். யு.எஸ். வரலாற்றில் மிக மோசமான படுகொலை இதுவாகும்.
ஒலான்டோ இரவு விடுதி ஓரினசேர்க்கையாளர்களின் பிரபல்யமான இரவு விடுதியாகும்.
2016 யூன் 12 அதிகாலை 2.02மணியளவில் சம்பவம் இடம்பெற்றது.ஒமார் மரீன் என்னும் துப்பாக்கிதாரி அனைவரையும் கொன்றதுடன் தனது விசுவாசத்தை ஐஎஸ்எஸ்சிற்கு உறுதிப்படுத்தியதுடன் தன்னை தானே சுட்டுக்கொல்வதற்கு முன்னர் பொலிசாரால் சுடப்பட்டார்.இச்சம்பவம் குறித்து இவரது மனைவி நூர் சல்மன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.