சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வித்தியாசமான படமாக கபாலி படத்தை தந்தவர் ரஞ்சித்.
இப்படம் கலவையான விமர்சனங்களுக்குள்ளானாலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தை முடித்த கையோடு காலா படத்தையும் சூப்பர்ஸ்டாரை வைத்து இயக்கி வருகிறார்.
இப்படத்தின் புகைப்படங்கள் அடிக்கடி வந்து சமூகவலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது. ஆனால் இதற்கு நடுவில் சூப்பர்ஸ்டார் நடித்துவரும் பிரமாண்ட படமான 2.0 பெரியளவில் பேசப்படாமல் இருந்து வருகிறது.
இதனால் இயக்குனர் ஷங்கர் அப்செட்டில் இருக்கிறாராம். ரஞ்சித்திடம் 2.0 படம் வெளியாகும் வரை காலா பப்ளிசிட்டியை கொஞ்சம் குறைத்துக்கொள்ளும்படி கூறியதாக தகவல்கள் பரவிவருகிறது.