எட்மன்டனில் கனடா 150 கொண்டாட்டம்!

மத்திய அரசாங்கம் எட்மன்டனில் இடம்பெற உள்ள கனடா-150 கொண்டாட்டத்திற்கு 700,000 டொலர்கள் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
எடமன்டன் நகர மண்டபம் மற்றும் அல்பேர்ட்டா சட்ட சபை மைதானம் இரண்டும் கனடாவின் 150-வது தினத்தை கொண்டாட 16 மணித்தியால இலவச நிகழ்வுகளை வழங்க உள்ளது.
எட்மன்டனில் கனடா தினத்தை நினைவு கூர்வதாக இந்த ஆண்டு அமையும்.
கனடாவின் 150-வது ஆண்டு நிறைவை கொண்டாட உதவும் பொருட்டு மத்திய அரசாங்கம் எட்மன்டனிற்கு 700,000டொலர்களை வழங்க உள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த நிதி நான்கு விடயங்களை அடிப்படையாக கொண்டிருக்கும் என உள்கட்டமைப்பு மற்று சமூகங்களின் அமைச்சர் அமர்ஜிட் சோகி விளக்கியுள்ளார்.
இளைஞர்களின் ஈடுபாடு, எங்கள் பன்முகத்தன்மையை கொண்டாடுதல், பூர்வீக மக்களுடன் சமரசம் மற்றும் சுற்று சூழல் நிலைத்தன்மை ஆகியனவற்றை உள்ளடக்கியதாக அமையும் என தெரிவித்துள்ளார். நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு நிதி வழங்கப்படும். பெரிய நகரங்கள் அதிக அளவிலான நிதி உதவியை பெறும்.
இந்த ஆண்டின் கனடா தின நிகழ்வுகளின் பெரும் பகுதி  பூர்வ குடியினரின் சமரசத்தை கவனத்தில் கொண்டிருக்கும் என மேயர் டொன் இவ்சன் தெரிவித்துள்ளார்.
கனடாவின் 150-வது ஆண்டு நிறைவு மக்கள் ஆர்வத்தையும் கனடியர்களாக இருப்பதில் பெருமை கொள்வதையும் மேலும் பலப்படுத்தும் என கருதப்படுகின்றது.

edm1

day

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News