சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் 40 வருடம் கலக்கிவிட்டு தற்போது அரசியலில் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் இவரது ரசிகர்மன்றம் சார்பாக வேலுர் மாவட்டம் சோளிங்கர் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் 2016-2017ம் ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும், நினைவுபரிசும் வேலூர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற சோளிங்கர் என்.ரவி அவர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்…
பெரும்பாலான இது போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் நின்று கொண்டும், பரிசு வழங்குபவர்கள் அமர்ந்து கொண்டும் இருப்பார்கள்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களை அமர வைத்து அவர்கள் மத்தியில் நின்று மகிழ்ந்தார். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வயது வித்தியாசமின்றி இருகரம் கூப்பி வணங்கி வரவேற்று மகிழ்ந்தார்.
ரவி பேசுகையில், தலைவர் அவர்கள் மாணவர்கள் மீது கொண்டுள்ள பற்றை மிகத்தெளிவாக விளக்கினார். அப்பொழுது தலைவர் அவர்கள் படிப்பை பற்றி பேசும் போதெல்லாம் தான் படிக்கவில்லையே என்று ஏங்கியது உண்டு என்று கண்கலங்கினார், அது போல ஒரு நாளும் இனி வரும் தலைமுறையினர் வருந்து விட கூடாது என்று அன்பாக கேட்டுக்கொண்டார்.