இலங்கையில் பாடல் மூலம் புகழ்ப்பெற்ற விஹாரத சஹல்லி ரோஹானா கமகே கனடா செல்லவுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த வாரம் திருமணம் முடிக்கவுள்ள பிரபல பாடகி, திருமணம் முடித்த பின்னர் கனடாவில் வாழ திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,இருவரும் கனடாவின் மருத்துவ சபையில் பரீட்சை ஒன்றை எழுத திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடகி, “விஷார்தா” பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் பங்குக் கொண்ட மூன்று ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அர்ப்பணிக்கும் வகையில் ‘ஆயூபவன், மஹாராஜாணி’ என்ற பெயரில் பிரபலமான பாடலையும் பாடியுள்ளார்.
இந்த பாடல் மூலமே, விஹாரத சஹல்லி ரோஹானா கமகே பிரபல்யமடைந்துள்ளார்.
குறித்த பெண்ணின்,பெற்றோர்கள் கனடாவில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.