இந்த இரு படங்களை முடித்த பிறகு உதயநிதி அடுத்ததாக பிரியதர்ஷனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். மூன்ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட் நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்க இருக்கும் இப்படம் ஒரு மலையாள படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.
திலீஷ் போத்தன் இயக்கத்தில், பகத் பாஷில் நடிப்பில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `மகேஷின்ட பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் உதயநிதி ஜோடியாக மலையாளத்தின் முன்னணி நடிகை நமீதா பிரமோத் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உதயநிதிக்கு வில்லனாக நடிக்க தேசிய விருது பெற்ற தமிழின் முன்னணி நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழு மறுக்கவில்லை என்றாலும், அதனை உறுதிப்படுத்தவும் இல்லை. எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.