ரொறொன்ரோவை சேர்ந்த 67-வயதுடைய மனிதன் ஒருவர் பேபி ரக்கூன் ஒன்றை குப்பை தொட்டி ஒன்றிற்குள் அடைத்தும் நீரில் மூழ்கடித்தும் உள்ளார் என்பது கண்டு பிடிக்கப்பட்டதுடன் இவர் மீது மிருகவதை செய்தார் என்ற குற்றமும் சாட்டப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு யோர்க்-பிராந்திய வீடொன்றில் இவ்வாறு நடந்துள்ளது. அதிஷ்ட வசமாக ரக்கூன் உயிருடன் காப்பாற்றப்பட்டது.
டவ்றின் வீதி மற்றும் எக்லிங்டன் அவெனியு பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் இருந்து நடு இரவு 1-மணியளவில் அழும் சத்தத்தை கேட்ட அயலவர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்றடைந்த பொலிசார் குழந்தை ரக்கூன் ஒன்று குப்பை தொட்டி ஒன்றிற்குள் கூடு ஒன்றிற்குள் அகப்பட்ட நிலையில் காணப்பட்டதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
கூட்டிற்கு மேல் பாறைகள் நிறைந்த தண்ணீருக்குள் அமுக்கப்பட்டிருந்ததாக கான்டபிள் டேவிட் ஹொப்கின்ஸ் தெரிவித்தார்.மிருகம் இறக்கும் தருணத்தில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குட்டியை காப்பாற்றிய அதிகாரிகள் மருத்துவ அதிகாரி சிகிச்சை அளிப்பதற்காக அதனை ரொறொன்ரோ வனவிலங்கு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது உயிருடனும் சுகமாகவும் இருக்கின்றது.
67-வயதுடைய லுஜி டிரோஸ் மீது மிருகங்களிற்கு தேவையற்ற துன்பத்தை கொடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டது.
சிலர் ரக்கூனை விரும்புகின்றனர் சிலர் அவ்வாறு இல்லை ஆனால் இத்தகைய நடவடிக்கை ஏற்று கொள்ள முடியாததென ரொறொன்ரோ வனவிலங்கு மையம் தெரிவித்துள்ளது. மற்றய விலங்கினங்கள் போன்று ரக்கூன்களும் வலியை உணரக்கூடியவை அதிலும் இந்த குழந்தைக்கு இத்தகைய கொடிய தாக்குதல் தேவையற்றதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.